உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – கடமைத்தவறிய காவல் துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்!
Friday, June 16th, 2023உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டானை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டதால், அந்த அதிகாரியை காவல்துறைமா அதிபர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
இதன்படி, நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் அவரை சேவையில் இருந்து இடைநீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எமக்கு பதவி வேண்டும் -கூட்டு எதிர்கட்சி!
எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!
தபால் சேவை முடக்கம்: பரீட்சைக் கட்டணங்களை பிரதேச மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த நடவடிக்கை!
|
|