உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Sunday, June 16th, 2024
850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் நேற்றையதினம் (15) இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி!
அடித்து கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள - பிரேத பரிசோதனையில் வெளிவந்தது உண்...
யாழில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதில் ஏற்பட்ட இழுபறிக்கு தீர்வு - கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவு...
|
|
|


