உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டுக் காலம் நிறைவு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, May 3rd, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண விடைத்தாள்களை மீள மதிப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கும், தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றியவர்களுக்கும் பெறுபேறுகள் அனுப்பப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீளத் திருத்தப்பட்ட விடைத்தாள்களின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கின்றன. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரி ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
குப்பைகளை அகற்ற விஞ்ஞான ரீதியான முறைமை - கார்தினல் மெல்கம் ரஞ்சித்
இறுதியாக பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனம் - ஜனாதிபதியின் இணை...
எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை நள்ளிரவில் அதிரிக்க முடியாது - பொதுப் பயன்பாடுக...
|
|
|


