உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா – ஜனாதிபதி தீவிர பரிசீலனை
Sunday, June 4th, 2017
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரீசிலிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இயற்கை இடரால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தப் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்துத் தான் கல்வி அமைச்சினதும் பரீட்சை திணைக்களத்தினதும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அந்த மாவட்டத்தின் இடர் நிலை பற்றி ஆராய்ந்த போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தென் மாகாணத்தைச் சேர்ந்த மாகாண சபைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் யூ.பி.டி.ஆரியதிலக முன்வைத்த வேண்டுகொளை ஏற்றுக்கொண்ட பின்னரே பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலனை செய்யவிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


