உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதிமுதல் மார்ச் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதேநேரம் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிட்தக்கது.
000
Related posts:
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் - சபையின் பிரதி பொதுமுகாம...
நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வியமைச...
|
|
பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு நடவடிக்கை - மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையி...
கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை - இராணுவத் தளபத...
தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்...