உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Tuesday, November 21st, 2023
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுமாயின், இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை, தனியார்துறை பங்களிப்பு, மின் விநியோகம் மற்றும் பரிமாற்றம் ஆகியனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குழந்தைகளுக்கு பால்மா கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு ஒப்பானது!
கொக்குவில் பெற்றோல் குண்டு தாக்குதல்: 4 பேர் கைது!
நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம் – அம...
|
|
|


