உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச காவற்துறையினரால் சிகப்பு எச்சரிக்கை  !

Friday, February 23rd, 2018

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

2006ம் ஆண்டு இடம்பெற்ற மிக் ரக வானுர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

காவற்துறை குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அடிப்படையில், 2006ம் ஆண்டு இலங்கை விமானப்படையினருக்கு, யுக்ரெயினின் யுக்ரென்மாசி நிறுவனத்திடம் இருந்து 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்த போது, அதில் மோசடி இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவராக இருந்தார் உதயங்க வீரதுங்கவும் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்பு கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விசாரணைகளின் அடிப்படையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அவருக்கு எதிராக இன்டர்போலினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: