உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பணிப்பு!

Tuesday, May 21st, 2024

உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

25,000 ரூபாய் வேதன உயர்வைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் சுகவீன விடுமுறையை அறிவித்து நேற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இணையாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி வேதன அதிகரிப்பிற்கு முன்னர் 15,000 ரூபாவினை மேலதிக கொடுப்பனவாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன்,

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: