ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, October 4th, 2018

வேலணை பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிக்கு தீர்வு கிட்டியுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நி

ர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவரும் பல இடங்கள் வேலணை பிரதேசத்தில் காணப்படுகின்ற போதிலும் அவற்றை நவீனமயப்படுத்தி மெருகூட்டுவதற்கான தேவைப்பாடுகள் அதிகமாக இருப்பதால் அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பல்வேறு வகையான அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொண்டதன் பயனாகவே இன்று ஓரளவு சுற்றுலா பயணிகள் எமது பகுதிகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் மத்தியின் ஆட்சி மாற்றமடைந்த போதிலும் வேலணை பிரதேசத்தின் ஆட்சி அதிகாரங்கள் எமது கட்சியிடம் கிடைக்கப் பெற்றதால் மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிறைவு செய்து கொடுக்க அயராது உழைத்துவருகின்றோம்.

இதன் பிரகாரமே கடந்த 27.09.2018  திகதி அன்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் றஞ்சன் அலுவிகார அவர்களை சந்தித்து நாம் எமது பகுதியின் சுற்றுலாதுறை அபிவிருத்தி தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அதற்கமைய சுற்றுலாத் துறையை வேலணை பிரதேசத்தில் மேம்படுத்தவதற்காக முதற்கட்டமாக ஐம்பது லட்சம் ரூபா நிதி எமது பிரதேசத்திற்கு அமைச்சர் றஞ்சன் அலுவிகார அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எமது பகுதியின் சுற்றுலாத்துறை தலங்களை மேம்பாடு செய்து இன்னும் அதிகளவான சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க முடியும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 43120768_1977617972537350_9154125314228486144_n

Related posts: