ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மாதர் அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் சாவகச்சேரி பகுதிக்குட்பட்ட ஒருதொகுதி மாதர் அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பகுதி நிர்வாகத்தினரிடம் சாவகச்சேரி நகர பெண்கள் விவகார அமைப்பு மற்றும் மீசாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியன விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுசெல்லப்பட்டு அவரது 2018 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் குறித்த அமைப்புகளின் நிர்வாகத்தினரிடம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தென்மராட்சி நிர்வாகச் செயலாளர்கள் அமீன், பிரகாஷ் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் லலிதாராணி, சண்முகரஞ்சினி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|