ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாகம் உறுப்பினர்கள் தெரிவு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாக செயலாளர்கள் தெரிவு நிகழ்வு நேற்றையதினம் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் (கி.பி) முன்னிலையில் நடைபெற்றது.
கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் கு.திலீபன் அவர்கள் தலைமையில் ரோயல் காடின் மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அமைப்பாளர் து.நெல்சன் வவுனியா நகரசபை அமைப்பாளர் யோ.நிரோசன் வவுனியா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.விக்ரர்ராஜ் வவுனியா மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கமலாதேவி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இளைஞரணி அமைப்பாளர் த.சுஜிவன் வவுனியா நகரசபை இளைஞரணி அமைப்பாளர் ரொசான் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை மகளிரணி அமைப்பாளர் பு.ராஜேஸ்வரி வவுனியா நகரசபை மகளிரணி அமைப்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய அமைப்பாளர் கட்சியின் சமகால அரசியல் முன்னகர்வுகள் தொடர்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|