இஸ்லாம் மத பாடசாலை நூல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

Tuesday, June 25th, 2019

இஸ்லாம் மத பாடசாலை நூல்களில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விபரங்களை நீக்குமாறு கோரி, காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திரநிலையமும், சிங்களே அமைப்பும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தன.

முஸ்லிம் மதத்தில் இருந்து மாறுகின்றவர்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொலை செய்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சமய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான வழிகள் ஊடாக பாடசாலை மட்டங்களிலேயே பயங்கரவாதம் போதிக்கப்பட்டு வந்துள்ளது என்று பிக்குகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை, சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுசெயலாளர் அப்துல் ராசிக்கை கைது செய்ய வேண்டும் என்று, எமது மக்கள்சக்தி கட்சி மற்றும் சிங்களே தேசிய அமைப்பு ஆகியன காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தன.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரசாத், எத்தனை முறைப்பாடுகள் செய்திருந்தாலும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Related posts: