இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!

Wednesday, February 7th, 2018

பாடசாலை மாணவர்களுக்கான நடப்பு வருடப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டது பரீட்சைத் திணைக்களம்.

இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய மாணவர்களுக்கு நடத்தப்படும் முதன்மைப் பரீட்சைகள் எந்தெந்த திகதிகளில் நடைபெறும் என குறிக்கப்பட்ட கால அட்டவணையைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் முதலாம் திகதி நிறைவடையும். அதற்கான செய்முறைப் பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும். உயர்தரப் பரீட்சைக்கான பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறும். ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 3 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை எனவும் இதற்கான செய்முறைப்பரீட்சை அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் பரீட்சைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாள்களிலும் நடைபெறமாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித் அறிவித்துள்ளார்.

Related posts:


பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் - அரச ஊழியர்கள்...