இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்!
Thursday, April 27th, 2017
இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் விமான சோதனை ஓட்டம் காரணமாக, எதிர்வரும் 27ம் திகதி முதல் இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் தமது பயண முகவரையோ அருகிலுள்ள இலங்கை விமான நிலைய அலுவகத்தையோ தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு இலக்கமான 0094197331979க்கு தொடர்பு கொண்டு அல்லது www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி!
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் - யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
|
|
|


