இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு – காற்று தர பிரிவு எச்சரிக்கை!
Saturday, November 7th, 2020
இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்றுத் தரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மாசுபட்ட காற்று வீசுவதன் மூலம், அது தற்போது இலங்கை வளிமண்டலத்தில் நுழைந்துள்ளதாக காற்று தர பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை, பருவமழைக்கு இடையிலான மழை நிலையை கொண்டிருப்பதால், பல நாடுகளிலிருந்து வீசுகின்ற காற்று இலங்கை வருவதன் காரணமாக வளிமண்டலம் மாசு படுகின்றதென காற்று தர பிரிவு குறிப்பிட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு தற்போது 90 -150 வரம்புக்கு இடையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் கடந்த ஒக்டோபர் 27அம் திகதி முதல் மோசமான காற்றின் தரத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலை மேலும், சில நாள்களுக்கு நீடிக்கக் கூடுமென்பதால் சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.முக்கியமான இந்தக்காலத்தில் சகல மக்களும் முகக்கவசங்களை மறக்காமல் அணியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


