இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு செயலாளர் !

இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் வர்த்தகத்தூதுக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கி இந்த வார இறுதிக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகத்தை மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் கொள்கையின் கீழ் இந்த விஜயம் ஒழுங்குச்செய்யப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை பொறுத்தவரை, சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு ஈடானவர்த்தகத்தை தேடுவதே நோக்கமாகும் என இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
எனினும் தமது விஜயத்தின்போது ஜெய்சங்கர், இந்திய இலங்கை எட்கா உடன்படிக்கை குறித்துபேச்சு நடத்தமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு...
ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் தொடர்பான பயிற்சி தேவை - யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...
ஜே.வி.பியினருடன் சந்திப்பு - முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் பொது வேட்பாளர் விடய...
|
|