இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

Friday, April 3rd, 2020

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலருக்கான விற்பனை பெறுமதி 192 ரூபா 80 சதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கைக்கு வந்ததன் பின்னர், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. தங்கத்தின் விலையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: