இலங்கை ரூபாயின் பெறுமதியில் அதிரடி மாற்றம் – வீழ்ச்சியை சந்திக்கும் டொலரின் பெறுமதி!
 Tuesday, July 4th, 2023
        
                    Tuesday, July 4th, 2023
            
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 239.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 225.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 326.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 400.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 379.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 28ஆம் திகதியுடன் (28.06.2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        