இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1500 மெற்றிக் தொன் டீசல் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
Friday, January 14th, 2022
இலங்கை மின்சார சபைக்கு ஜனவரி 18 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3,000 மெற்றிக் தொன் டீசல் பெற்றுக்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அவ்வாறு டீசல் வழங்கப்படுமாயின் மின்சார துண்டிப்பைக் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்னுற்பத்தி இயந்திரங்களை இயக்க முடியாமையால் நேற்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேசிய மின் கட்டமைப்பில் 300 மொவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலை எண்ணெய் இன்மையால் மின்சார தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து மூவாயிரம் மெற்றிக் டன் டீசல் பெற்றுக்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


