இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 120.3 பில்லியன் ரூபா இலாபம்!
Sunday, May 19th, 2024
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் (2023) ஆம் ஆண்டு 120.3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த பொருளாதார வர்ணனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் 2022 ஆம் ஆண்டில் 617.6 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.
செலவு-பிரதிபலிப்பு விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நிறுவனத்தின் மேம்பட்ட நிதிச் செயல்பாட்டிற்கு வழிவகுத்தது என்றும் மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அரச நிறுவனங்களுக்கு 17.7 பில்லியன் ரூபா கடனை செலுத்த நேரிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை, பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய வர்த்தகக் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவை தொகை 206.0 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


