இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சர்வதேச விருது! 

Tuesday, February 27th, 2018

டுபாய் க்ரான்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச துறைமுக கூட்டத் தொடரான 2018 விருது விழாவில், இலங்கை துறைமுக அதிகார சபை விருதொன்றைவென்றுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் நிறைவேற்று முகாமையாளரான உபுல் ஜயதிஸ்ஸவும், நளீன் அபொன்சும், இந்த விருதுகளைப் பெற்றனர்.

இந்த விருது விழாவுக்கு அமைவாக இரண்டு நாள் மாநாடொன்றும் இடம்பெற்றது. இந்த விருது விழாவை சர்வதேச துறைமுக கூட்டத்தொடர் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதில் அங்கத்துவம் வகிக்கும் துறைமுகங்களின் செயற்பாடுகள், எதிர்கால அபிவிருத்திக்கான பங்களிப்புகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts:


பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் - யாழ். பல்கல...
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...