இலங்கை – சீனா இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, July 7th, 2017
தேசிய சுற்றாடல் மற்றும் கால்நடை பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய புரிந்தணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கடந்த மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உடன்படிக்கையில் சீனாவின் சார்பில் அந்நாட்டு வனவள அமைச்சர் கைச்சாத்திட்டார்.
தேசிய சுற்றாடல் மற்றும் கால்நடை பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த உடன்படிக்கையின் கீழ் தேவையான விசேட அனுபவங்கள், பயிற்சிகளை வழங்குதல், தொழில்நுட்ப தகவல்கள் என்பன இந்த உடன்படிக்கையில் கீழ் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் தொழில்வாய்ப்புகள் பல உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் போராட்டம்!!
இலங்கை ஏற்றுமதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரி அறவீடு!
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...
|
|
|


