இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான புதிய யாப்பு விரைவில் – விளையாட்டுத்துறை அமைச்சு அறிவிப்பு!
Tuesday, December 6th, 2022
ஆட்சி நிபுணர்களால் சுயாதீன குழுவொன்று அமைக்கப்பட்டு இலங்கையின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு என புதிய யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இந்த புதிய யாப்பினை உருவாக்க தீர்மானித்துள்ள விடயத்தை விளையாட்டு அமைச்சு நீதிமன்றிக்கு தெரியப்படுத்தியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சு சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன சட்டமா அதிபர் திணைக்களம் வழியாக நீதிமன்றிற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த புதிய யாப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் யாவும் சர்வதே கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவே நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் - பெப்ரல் அமைப்பு!
பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது!
மகுடம் சூடியது அராலி சரஸ்வதி வித்தி!
|
|
|


