இலங்கை – கனடா நேரடி விமானசேவை : அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
Thursday, May 18th, 2017
இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான விமான சேவையினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதிகளவிலான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்விதமான நேரடி விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.
அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
இலங்கையில் சிசு மரணங்கள் குறைப்பு!
கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்து 959 வீதி விபத்துக்கள் - 205 பேர் பலி - ஆயிரத்து 254 பேர் காயம் - பொலி...
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை - தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்...
|
|
|


