இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு – 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
Sunday, June 23rd, 2024
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று(23) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நான்காம் திகதி மீண்டும் தெரிவுக் குழு கூடும்!
ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!
அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!
|
|
|


