இலங்கை – இந்திய உறவை வலுவாக்க பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Saturday, March 11th, 2023

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது காணப்படும் உறவுகளை விசேடமானதாக மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியமானது என, இந்தியாவுக்கான இலங்கைத் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராணுவக் கல்லூரியில் இந்திய இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் வரை தற்போதைய விசேடமான உறவுகள் வரை சுட்டிக்காட்டிய மிலிந்த மொரகொட, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மூலோபாய முக்கியத்துவம் தொடர்பாகவும் வலியுறுத்தினார்.

இலங்கை- இந்தியாவுக்கு இடையில் உயிர்த்துடிப்பான உறவு தொடர்பாக மேலும் விபரித்த அவர், இலங்கையில் நெருக்கடிமிக்க காலகட்டத்தில் 4 மில்லியன் டொலர் உதவியை வழங்கியதன் மூலம் இந்தியா ஆற்றிய முக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியா தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கும் பயிற்சிகள் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் - நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வு ...