இலங்கை – இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றேன் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நெகிழ்ச்சி!

சீதையம்மன் ஆலயத்திலிருந்து புனித சின்னம் ஒன்று இந்தியாவுக்கு வழங்குவதானது இலங்கை மற்றும் இந்தியாவின் நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர் –
அயோத்தி இராமர் கோவில் நிர்மாண பணிகளுக்காக இலங்கையின் சீதையம்மன் ஆலயத்திலிருந்து புனித சின்னம் இந்தியாவிற்கு வழங்கும் நிகழ்விற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவு வழிகள் உள்ளமையை உணர்ந்து வியந்தேன்.
இதனூடாக இரு தரப்பு நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதை காணக்கூடியதாக இருந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
அதுமாத்திரமன்றி இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவிற்கும் புதிய அடித்தளமொன்று இடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு பின்னதாக இந்தியர்கள் பலர் சீதா – எலியவிற்கு வருகை தருவார்கள் என்று இதேவேளை அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் புதிய கோயிலைப் பார்வையிடுவதற்கு இலங்கையர்களும் இந்தியாவிற்குச் செல்வார்கள் என்றுமு; எதிர்பார்கின்றேன் என்றுமு; அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|