இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வரவேற்பு !
Sunday, September 25th, 2016
பாடசாலைகளுக்கு கடமைகள் நிமித்தம் வரும் தாய்மார் சேலை அணிந்து வருவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுமன்தினம் தினம் அறிவிப்புசெய்திருந்தார்.
அத்துடன் சேலை அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்த அமைச்சர் பாடசாலைக்கு பொருத்தமான உடையில் தாய்மார் வருவது கட்டாயம் என்றும்தெரிவித்திருந்தார். கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வரவேற்பை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த விடயத்தை வரவேற்பதுடன், இது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவுள்ள புதிய சுற்று நிருபத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டும்எனவும் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts:
உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை - விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெர...
இலங்கையின் கூட்டிணைவை பாராட்டும் அமெரிக்கா – உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் ஜனாதிப...
|
|
|


