இலங்கை அகதியை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!
 Friday, June 7th, 2019
        
                    Friday, June 7th, 2019
            
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்ற அவர், இருகண்ணும் தெரியாதவர் என்றும், உளநலன் குன்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் விளாவுட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பான விபரங்களை அறிந்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான செயற்குழு, அவரை விடுவித்து, அவருக்கு நட்டயீட்டை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அகதி என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரை 9 வருடங்களாக தடுத்து வைத்துள்ளமை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது!
கடும் சுகாதார வழிமுறைகளுடன் மாகாண எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்ட அளவில் பேருந்து சேவைகள் முன்னெடுப்ப...
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        