இலங்கையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு !
Monday, March 22nd, 2021
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையின் தேயிலை உற்பத்தி நூற்றுக்கு 23 என்ற வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் தேயிலை உற்பத்தி 22.3 மில்லியன் கிலோகிராம் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் 18.2 மில்லியன் கிலோகிராம் பதிவாகியுள்ளது.
அதேநேரம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களுக்குள் இலங்கையிலிருந்து 44 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் முதல் இரு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருவாய் 41 பில்லியன் ரூபாவை கடந்ததுடன், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 3.36 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 940 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊர்காவற்றுறை படுகொலை: வைத்திய பரிசோதனை அறிக்கை வெளியானது!
சுவிஸ் தூதரக பணி பெண் குறித்து புதிய தகவல்?
மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!
|
|
|


