இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு முந்நாள் இந்நாள் ஜனாதிபதிகள் விஜயம்!
Saturday, December 3rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு இருந்தனர்.
சீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் சீன தூதரகத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது சீன தூதுவரை சந்தித்த இருவரும் தமது அனுதாபங்களை பகிர்ந்துக்கொண்டனர்.
இதவேளை சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் 1989ம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிதோடு 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சீனவின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தமை குறிப்பிடதக்கது
Related posts:
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!
சீனவின் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமடைய தேவையில்லை - பல நாடுகளிலும் பாவனையிலுள்ளது என்கிறார் ...
போக்குவரத்து அமைச்சர் பந்துல நடவடிக்கை - வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்...
|
|
|


