இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, March 6th, 2019
தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
காற்றின் வேகம் குறைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு கடுமையான வெப்பநிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மே மாதம் பருவப் பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கும் வரையில் வெப்பத்துடன் கூடிய காலநிலை இடைக்கிடை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவு பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய எதிர்வு கூறியுள்ளார்.
Related posts:
நான் முதுகெலும்பு இல்லாதவனா? – ஜனாதிபதி!
தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் தற்பொழுதுள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்வைத்தராது - இராணுவத் தள...
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலு...
|
|
|


