இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை !
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம். இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.
அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
நாளை முதல் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஆரம்பம்!
கர்ப்பிணி உட்பட பல பெண்கள் பலாத்காரம்.! ராணுவத்தினர் கொடூர வெறிச்செயல்..!!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
|
|
|


