இலங்கையின் மோசமான நிலைமைக்கு ஊழலே காரணம் – பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
Friday, May 6th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு நல்ல தொலைநோக்கு பார்வைகள் மற்றும் திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
ஊழல் நிறைந்த அமைச்சரவையினால் தான் எதையும் வெற்றிகரமாக செய்யவில்லை என ஜனாதிபதி கூறினார். அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலக வங்கியின் நிபந்தனையால் பணிகள் மேலும் தாமதமாகலாம்!
எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் - ஜனாதிபதி சந்திப்பு!
மூவாயிரம் அசிரியர்களுக்கு இடமாற்றம்!
|
|
|


