இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 32.83 பில்லியன் டொலர்!

இலங்கைக்கு 32.83 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சின் நடு ஆண்டு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே, மொத்த வெளிநாட்டுக் கடன், 32.83 பில்லியன் டொலராக இருந்தது.
அதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாளுக்கும், ஏப்ரல் 30ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், கடனுக்கான கொடுப்பனவாக, 2,331.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இதில், 1,904.7 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்ட மூலதனமாகும். 426.8 மில்லியன் டொலர் கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியாகும்.
Related posts:
தபால் மூல வாக்களிப்புக்கு 5 இலட்சம் பேர் தகுதி!
நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!
வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நா...
|
|