இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருமலையில்!
Friday, July 13th, 2018
இலங்கையில் விரைவில் புதிதாக சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் ஒன்றில் கூறியுள்ளார்.
நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த திட்டம் திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.
இந்த திட்டம் திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு வாழ்த்தியதுபாக்கிஸ்தான்!
போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகள் : நாட்டின் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க த...
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு -...
|
|
|


