இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிரந்து மிக விரைவில் மீண்டு அபிவிருத்தி பாதையை அணுகும் – சீனா வெளியிட்ட அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023

இலங்கை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை மிக விரைவில் சமாளித்து அபிவிருத்தி பாதையை அணுகும் என்றும், இதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் சீனா வழங்கும் என சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நேற்று முன்தினம் மல்வத்தை விகாரைக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்கர் திப்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் வலுவான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு பௌத்த மதம் முக்கிய காரணமாகும் என்றும் எதிர்காலத்தில் அந்த நட்பை மேலும் வளர்க்க சீனா உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் - ...
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
2023 இல் விடுமுறையை குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...