இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சீனா கலந்துரையாடல்!
Wednesday, September 14th, 2022
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து, இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின், தெற்காசிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கெனிசி யொகொயாமா மற்றும் அதன் இலங்கை தூதுக்குழுவின் பணிப்பாளர் சென் சென் ஆகியோரை, சீன தூதுவர் ஸி சென்ஹொங் நேற்று சந்தித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக, சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யுனெஸ்கோவுகு வழங்கும் நிதி ஆதரவை நிறுத்தியது ஜப்பான்!
இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!
உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடா...
|
|
|


