இலங்கையின் கடற்பகுதி தீவிர பாதுகாப்பில் – வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!

நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளர்.
இந்நிலையில், கடல் எல்லையின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்தத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டம்!
நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலக்கின்றது - சுற்றாடல் அமைச்சு எச்சரிக்க...
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதியில் தாமதம் - தெரிவாகிய மாணவர்கள் குற்றச்சாட்டு!
|
|