இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இந்தநிலையில் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 2.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊடகவியலாளர் அச்சுறுத்தலின்றி கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு - ஊடகத்துறை அமைச்சர் கருணாதிலக !
மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு - ஐரோப்பிய ஒன்றியத்தினூ...
|
|