இலங்கையின் அபிவிருத்திக்கு மீண்டும் சீனா உதவி!

இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை சீனா அளித்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த கடனுக்கு சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிலும், 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
Related posts:
அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ! கோப் அறிக்கை பரிந்துரை!!
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!
மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம் - எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை பதவியேற்பு விழா - புதுடில்லி செல...
|
|