இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்- துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 14 மாணவர்கள் உட்பட 70 இலங்கையர்கள் உள்ளனர் எட்டுமாணவர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டனர் ஏனையவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளதால் நாங்கள் எடுக்ககூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்துவருகின்றோம்,ஆனால் அனைத்து இலங்கையர்களுடனும் தொடர்பில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் ஐவர் கைது!
|
|