இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள்!
Saturday, October 15th, 2016
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று (14) காலை இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தலைமையில் யாழ். கோட்டைக்குமுன்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். தேசியக் கொடியினை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினைப் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டார்.


Related posts:
இரு பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு!
வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள் – அல்வாயில் ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஷ்!
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


