இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவித்தல்!

Saturday, November 14th, 2020

இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பனவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கைக்குள் நுழையும் மற்றும் இலங்கையில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளுக்கும் வெளிவிவகார அமைச்சு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகக்கும் வெளிவிவகார அமைச்சு இந்த முன்னெச்சரிக்கை தகவல் பொருந்தும் எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது..

இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தை, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர் தொகையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படம் எனவும் தெரிவித்துள்ளதுர்.

வெளிநாட்டுகளில் வசிப்பவர்கள், மேலதிக மற்றும் உண்மையான தகவல்களுக்காக, அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம், அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு தங்கள் கவலைகளை இலங்கை வலை இணையதளத்தில் www.contactsrilanka.mfa.gov.lk/ என்ற முகவரியில் பதிவு செய்யவும் முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: