இலங்கைத் தேயிலை உற்பத்தியில் முன்னேற்றம்!

இலங்கைத் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூசில்லி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் 10 சதவீதத்தாலும் உற்பத்தி மூலம் 15 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளதாகவும் இந்த வருடம் முழுவதும்இதேபோன்ற முன்னேற்றத்தை தேயிலை உற்பத்தியாளர்கள் பெறுவர் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியினுள் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி சந்தை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன் இந்த வருடத்தின் ஏனைய காலப்பகுதியினுள்ளும்இதேபோன்ற பெறுபேறுகளை எதிர்ப்பார்க்கலாம் என தைக்கப்பட்ட ஆடைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் ரூளி குறே தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்தும் கடுமையானது - இலங்கைக்கா...
அதிக காற்று - வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!...
|
|