இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்!
Tuesday, July 13th, 2021
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இன்றுகாலை நாட்டை வந்தடைந்தது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றன.
இவற்றில் 5 இலட்சம் தடுப்பூசிகளை கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் தடுப்பூசிகளை களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் நுவரெலியா, பதுளை, மாத்தளை, அநுராதபுரம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் வீதம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகா...
கச்சத்தீவு திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழ்மாவட்ட அரச அதிபர் தகவல்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் -...
|
|
|


