இலங்கைக்கு மேலும் ஒரு நெருக்கடி!
Thursday, February 23rd, 2017
நாட்டில் நிலவுகின்ற காலநிலை காரணமாக மின்உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இருந்தும் தடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சிப்பது என்பது சவாலான விடயமாகும் என மின்சாரசபையின் தலைவர் அநுர விஜேபால தெரிவித்துள்ளார். நூற்றில் 10 வீதமாவது மின்சாரத்தை மீதப்படுத்துவதென்பது தற்போது அவசியமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நீர்த்தேக்கங்களில் தற்போதுவரையில் அதிகமான நீர், பயிர்ச்செய்கை மற்றும் குடிநீருக்காக வழங்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:
கொரோனா தொற்று: இலங்கையில் ஒரே நாளில் 54 மரணங்கள் பதிவு – அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு!
60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமா...
ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ...
|
|
|


