இலங்கைக்கு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான நிதியுதவி!

நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. இதில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மாகு, ஜேர்மன் தூதுவர் ஜோஏர்ன் ரோட் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு மொத்தமாக 14.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பேரணி!
சட்டவிரோத மணல் அகழ்வு - வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம் - கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிக...
|
|