இலங்கைக்கு உண்மையான நண்பனாக சீனா இருந்தது – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவிப்பு!
Wednesday, July 26th, 2023
இலங்கை மீது சர்வதேச அரங்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோது, சீனா உண்மையான நண்பனாகவே இருந்து, தோள் கொடுத்தது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 96 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மதிக்கின்றன. நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு பங்களிப்பதிலும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சீன மக்கள் விடுதலை இராணுவம் அதன் தொடக்கத்திலிருந்து நவீன மற்றும் சக்திவாய்ந்த சக்தியாக அதன் தற்போதைய கட்டமைப்பு வரை மேற்கொண்ட பயணங்கள் சீனாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும். மேலும், யுத்த காலப்பகுதியில் சீனாவினால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு எம் நன்றிகள்.
இதேவேளை, இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய சீனா பெரும் பங்காற்றியுள்ளது ” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


