இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தியா!
Tuesday, April 16th, 2024இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இந்திய அரசாங்கம் நேற்று முதல் (15) இந்த தடையை நீக்கியுள்ளது.
வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்தியா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை , இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று முதல் நேரடியாக வரவு செலவுத் திட்ட விவாதம்!
ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் விரைவில் அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட பொலிஸார் - இறைச்சியாக்கப்படவிருந்த பல மாடுகள் மீட...
|
|